இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.
காலை ஆரம்பிக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் தேர்தல் பணிகளை முன்னிட்டு முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் வாக்களிப்பு
Reviewed by Insightful Writer
on
செப்டம்பர் 21, 2024
Rating:
கருத்துகள் இல்லை: