பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களுக்கு அரச இல்லங்கள் வழக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையில் 25இற்கும் குறைவான அமைச்சர்களே செயற்படுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர்களை அரச ஊழியர்களாக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் பெருமளவில் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு கொழும்பில் அரசாங்க வீடுகள் வழங்கப்பட்டு வருவது வழமை. எனினும் புதிய அரசாங்கத்தில் அந்த சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பரப்புரைகளின் போது அரசியல்வாதிகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டு, நாட்டின் அபிவிருத்திக்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை: