Your Ads here... +94754957701

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான செய்தி

 2024 கல்விப் பொதுத்தராதர உயர்த்தர பரீட்சை தொடர்பில் இன்று (19) நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சை முடியும் வரை அமுலுக்கு வரும் வகையில் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள்,  செயலமர்வுகள் போன்றவற்றை நடத்துவதுடன், பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை அச்சிடல் மற்றும் விநியோகித்தல், பரீட்சைத் தாள்களின் வினாக்கள் வழங்கப்படும் என்றோ அல்லது அதற்கு சமமான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், பிரசுரங்கள், மின்னணு அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல் அல்லது வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.


யாரேனும் ஒருவர், நிறுவனம் அல்லது சில தரப்பினர் இதனை மீறினால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை இம்முறை, க.பொ.த உயர்த்தர பரீட்சை 2,312 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளது.  நடைபெற உள்ளது.


அதன்படி, எதிர்வரும் 22ம் திகதி அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, 2025 ஜனவரி 1ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். 

#GCEAL2024 #ALExam


க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான செய்தி க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான செய்தி Reviewed by Insightful Writer on நவம்பர் 20, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

Ads here... +94754957701

Blogger இயக்குவது.