Your Ads here... +94754957701

பாடசாலை மாணவர்களுக்கு நன்மையளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் விரைவில்!

    ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய அடுத்த வருடம் முதல்  அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க எதிர்பார்ப்பதாக  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.



சர்வதேச சமூகத்தின் ஆதரவு வலுப்பெற்றுள்ளது.மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை வழங்க முடிந்துள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவு, மீனவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு என அனைத்தையும் செய்ய முடிந்துள்ளது.

குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளை பலப்படுத்தப்பட வேண்டுமானால், இந்த நேரத்தில் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகள் குறைக்கப்பட வேண்டும்.

உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கான செலவீனங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அவற்றைக்
கட்டுப்படுத்தினால் வாழ்க்கைச் செலவு கட்டுப்படும். அதற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும். 

புத்தாண்டில் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள்  தொடங்கும் போது, ​​ மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் தர எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு நன்மையளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் விரைவில்! பாடசாலை மாணவர்களுக்கு நன்மையளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் விரைவில்! Reviewed by Insightful Writer on நவம்பர் 09, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

Ads here... +94754957701

Blogger இயக்குவது.