சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இதன் போது 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 28,500 மெற்றிக் தொன் பச்சை அரிசி எனவும் எஞ்சிய 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
#riceimport #srilankanews
நாட்டில் 60,000 மெற்றிக் தொன்களை தாண்டியுள்ள அரிசி இறக்குமதி
Reviewed by Insightful Writer
on
டிசம்பர் 22, 2024
Rating:
கருத்துகள் இல்லை: