நாட்டிலில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை! (இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை).
நாட்டில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இதற்கு சில மருந்து நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்காலிகமாக விலைக் குறைப்பின் நடவடிக்கை தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் மருந்துகளின் விலைகளை குறைக்க விலை கட்டுப்பாட்டை மீறிய முறையில் நகர்த்தல் பத்திரம் மூலம் பிரச்சினைகளை முன்வைக்கவேண்டும் என்று அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்பின்னர் மருந்துகளின் விலைகளை குறைக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது.
நாட்டிலில் HMPV நோயாளிகள்
இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்ட எவரேனும் கண்டறியப்பட்டால் மக்களுக்குத் தெரியப்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நோயெதிர்ப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஒருவர் சில காலத்திற்கு முன்பு இலங்கையில் HMPV நோயாளிகள் கண்டறியப்பட்டதாகக் கூறியதை சில ஊடகங்கள் தவறாக மேற்கோள் காட்டியதாகவும், முக்கியமான பிரச்சினைகளை அறிக்கையிடும் போது பொறுப்புடன் செயல்படுமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: